திருவண்ணாமலை

இளைஞர்கள், இளம்பெண்கள் 2000 பேர் கழகத்தில் ஐக்கியம் – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்பு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குப்பம், படைவீடு, காள சமுத்திரம், கல் குப்பம் , வாழையூர் அனந்தபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் இருந்து திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியிலிருந்தும், புதியதாகவும் 2000 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் கழகத்தில் இணைத்து கொள்ளும் நிகழ்ச்சி குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு எம்ஜிஆர் மன்ற மாவட்ட கழக செயலாளரும், கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாற்று கட்சியில் இருந்து கழகத்தில் இணைந்த அனைவருக்கும் வேட்டி, துண்டு மற்றும் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற புரட்சித்தலைவி அம்மா மக்களுக்காக வாழ்ந்தவர். அவர் வழியில் முதலமைச்சர், அம்மாவின் வழியில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். இன்றைக்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்த அரசுக்கு எதிராக பல்வேறு பொய் பிரச்சாரத்தை பரப்பினார்கள். அவையெல்லாவற்றையும் இன்றைக்கு தவிடுபொடியாக்கி தமிழக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அரசாக இன்றைக்கு இந்தியாவிற்கே முன் மாதிரி மாநிலமாக மாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்று உள்ளார் முதலமைச்சர்.

தமிழகத்தை சிறந்தமாநிலமாக உருவாக்கியுள்ளார். இந்த மூன்று மாத காலத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததால் தமிழகத்தில் கொரானா தொற்றுநோய் தாக்கம் குறைந்துள்ளது .மிக விரைவில் தமிழகத்தை கெnரோனா இல்லாத மாநிலமாக நமது முதல்வர் உருவாக்கி காட்டுவார். எனவே முதல்வர் கூறியது போல் கொரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக் கவசங்கள் அணிந்து வெளியே செல்ல வேண்டும்.

இளைஞர்களாகிய தாங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இதனை கட்டாயம் பின்பற்ற அறிவுரை வழங்க வேண்டும் . இளைஞர்களுக்காக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. எனவே இளைஞர்கள் இளம்பெண்கள் இந்த வாய்ப்பினை நல்ல முறையாக பயன்படுத்தி தங்களது வாழ்வினை உயர்த்திக் கொள்ளுமாறு இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் முகக்கவசங்கள் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், கிருமிநாசினி பயன்படுத்தியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக துணைச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நளினி மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி புதுப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.