தூத்துக்குடி

திமுக எம்.பி கனிமொழியின் நாடகம் மக்களிடம் இனி எடுபடாது போ.சின்னப்பன் எம்.எல்.ஏ காட்டமான பதில்

தூத்துக்குடி

கொரோனா நோய் தடுப்புக்கான நிவாரணத்தில் கூட அரசியல் விளம்பரம் தேட நினைக்கும் திமுக எம்.பி கனிமொழியின் அரசியல் நாடகம் மக்களிடம் இனி எடுபடாது என்று போ.சின்னப்பன் எம்எல்ஏ காட்டமான பதில் அளித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான ஊரடங்கை முன்னிட்டு தமிழக மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்காமலிருக்க கழத்தினர் அனைவரும் கொரோனா நிவாரண உதவிகளை மக்களுக்கு தாராளமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணையிட்டார்.

அதற்க்கேற்ப தமிழகம் முழுவதும் கழகத்தினனர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை தங்களது சொந்தப் பணத்தில் வாரி வழங்கி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் எப்படி போனால் நமக்கென்ன என்ற எண்ணத்தில் வீட்டடை விட்டு வெளியே வராமல் வீட்டில் இருந்தபடியே அரசியல் செய்து வருவதை மக்கள் அனைவரும் நன்கறிந்து உள்ளனர்.

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில் அவரது கட்சியை சேர்ந்த எம்.பி கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிபெற்ற பின்பு இதுவரை மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. திடீரென விளாத்திகுளம் தொகுதியில் கண்துடைப்புக்காக அரசியல் செய்யும் நோக்கத்துடன் நாங்கள்தான் மக்களுக்கு உண்மையாக நிவாரண உதவி வழங்குகிறோம் என்ற பொய்யான தகவலை மக்களிடம் கூறி நிவாரணப் பொருட்களை ஒருநாள் வழங்கி அரசியல் நாடகமாடுகிறார் திமுக எம்.பி கனிமொழி.

அவரின் அரசியல் நாடகம் இனிமேலும் மக்களிடம் எடுபடாது என்று தன்னுடைய சொந்த செலவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் அரிசி மற்றும் காய்கறிகளை தனது விளாத்திக்குளம் தொகுதி மக்களுக்கு கடந்த 2, மாதங்களுக்கு மேலாக நிவாரண உதவிகளாக வழங்கி வரும் போ.சின்னப்பன் எம்.எல்.ஏ திமுகவினருக்கு காட்டமான பதில் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தமிழகத்தில் பரவ விடாமல் தடுத்து மக்களை காக்கும் கடவுளாக இருந்து புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறைகள் மூலம் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாகத் தான் இந்த கொரோனா வைரஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய் தமிழகத்தில் அதிகம் பரவாமல்‌ தற்போது தடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழகத்தில் மத துவேஷங்களை கூறி மக்களிடம் வாக்குகளைப் பெற்றிட நாடகமாடி வந்த தி.மு.க.வினர் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் கொரோணா நிவாரண உதவிகளாக அரிசி மற்றும் காய்கறிகளை பொதுமக்கள் அனைவருக்கும் கழகத்தினர் வழங்கி வருவதை கண்டு மனம் பொறுக்காமல் கொரோனா வைரஸ் நோயிலும் அரசியல் விளம்பரம் தேடும் நோக்கத்துடன் விளாத்திகுளம் தொகுதியில் பெயருக்கு நிவாரண உதவிகளை வழங்கி மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் திமுக எம்.பி கனிமொழியின் அரசியல் நாடகம் விளாத்திகுளம் தொகுதி மக்களிடம் எந்த காலத்திலும் எடுபடாது என்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டபிடாரம் ஒன்றியத்தின் வேலாயுதபுரம் குமரபுரம் சுப்ரமணியபுரம் கிராம மக்கள் 2, ஆயிரம் பேருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கிய போ.சின்னப்பன்‌ எம்.எல்.ஏ, மக்களை ஏமாற்றி வரும் திமுகவினருக்கு காட்டமான பதில் அறித்துள்ளார்.