தற்போதைய செய்திகள்

திருவொற்றியூரில் 500 ஏழை கும்பங்களுக்கு நிவாரண உதவிகள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

அம்பத்தூர்

திருவொற்றியூரில் 500 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

திருவொற்றியூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரணமாக ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகளை முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் தொடர்ச்சியாக வழங்கி வருகிறார். இதுவரை 50 ஆயிரம் பேருக்கு மேல் அரிசி, பருப்பு போன்ற நிவாரண உதவிகளை வழங்கி உள்ளார். மேலும் அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு சாப்பிடுவதற்கு வசதியாக ரூ.7 லட்சத்தை மாநகராட்சி அதிகாரிகளிடம் வழங்கினார்.

திருவொற்றியூர் மண்டலத்தில் வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் திருவொற்றியூர் மண்டலத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று கழகம் சார்பில் திருவொற்றியூர் தேரடியில் நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். அரிசி பருப்பு காய்கறி பால் பிரெட் போன்ற பொருட்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். 500க்கும் மேற்பட்ட ஏழை எளியோர் பலன் அடைந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.