திருவள்ளூர்

மீஞ்சூர் ஒன்றியத்தில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவி – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ, எஸ்.ராகேஷ் ஆகியோர் வழங்கினர்

திருவள்ளூர்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் ஒன்றியம் வேம்பாக்கம், தசரதன் நகர் ஆகிய கிராமங்களில் 3000 ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ் ஆகியோர் வழங்கினர்.

கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தினந்தோறும் ஒவ்வொரு கிராமமாக சென்று ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் பொன்னேரி தொகுதியில் உள்ள மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய தொகுப்பினை பி.பலராமன் மற்றும் எஸ்.ராகேஷ் ஆகியோர் வழங்கினர். அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு ஒன்றன்பின் ஒன்றாக வந்து நிவாரணப் பொருட்களை பெற்று சென்றனர். அதேபோல் தசரதன் நகரில் உள்ள 1000 ஏழை குடும்பங்களுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.பலராமன் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் பொதுமக்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை முதலமைச்சர் உத்தரவின் பேரில் அனைவரும் வழங்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் முதல்வர் மத்திய குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினருடன் சமூக ஆர்வலர்கள் உடன் கலந்தாலோசித்து நல்ல முடிவுகளை எடுத்து வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சரை பார்த்து வியந்து போய் என்ன குறை சொல்வது என்று தெரியாமல் உளறி வருகிறார். சில நேரங்களில் தவறான தகவல்களையும் அளித்து வருகிறார்.

ஆனால் அம்மாவின் வழியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் செயல்பட்டு தமிழக மக்களின் மேல் அக்கறை உள்ள சிறந்த முதலமைச்சர், சிறந்த துணை முதலமைச்சர் என்று பாமர மக்களிடையே பெயர் பெற்றுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய நடுத்தர குடும்பங்களுக்கு உதவும் வகையில் நம்முடைய கழக அரசு அனைத்து குடும்பங்களுக்கும் உதவி செய்யும் அரசாக திகழ்கிறது.

தமிழக முதல்வர் விழித்திரு, தனித்திரு, வீட்டில் இரு என்று சொல்லி இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார். இனிவரும் காலங்களில் தமிழகம் முழுவதும் கழகத்தின் வெற்றியாகவே தொடரும்.

இவ்வாறு சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மோகன வடிவேல், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் பானுபிரசாத், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனம், ஒன்றிய கவுன்சிலர் விஷ்ணுபிரியா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர், தமிழ்ச்செல்வன் முன்னாள் கவுன்சிலர்கள் வாசு, சிவராஜ், அமிர்தலிங்கம், வழக்கறிஞர் பிரிவு இளையராஜா, மாரி, பொன்னேரி துர்கபிரசாத், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ஸ்ரீதர் மாணவரணி சூர்யா, காமேஷ், கௌதம், இமான், விவேக், பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.