தற்போதைய செய்திகள்

தண்டையார்பேட்டையில் கொரோனா தடுப்பு பணி – அமைச்சர் க.பாண்டியராஜன், ஆர்.எஸ்.ராஜேஷ் ஆலோசனை

சென்னை

தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்று தடுப்புக்கான ஆலோசனை கூட்டம் மண்டல அலுவலகத்தில் அமைச்சர் க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதில் பெரம்பூர் பகுதி, ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள பகுதிகளில் நோய் தொற்றுக்கான ஆரம்ப அறிகுறி உள்ளவர்கள் வெளிமாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள், மாநகராட்சி பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்கள், வீடுகளில் தனிமையில் கோரண்டைன் பகுதிகளில் பரிசோதனைகளை விரைந்து மேற்கொண்டு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் மாநகராட்சி, மற்றும் மண்டல அதிகாரிகள், சுகாதார துறை, காவல்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

அப்போது அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலை ஏற்று தண்டையார்பேட்டை மண்டலத்தில் சமூக பரவலை தடுக்க அரசு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தேவையான நடவடிக்கைகளை ஆய்வு அறிக்கையின் படி அடுத்த கட்டமாக முதலமைச்சரிடம் சென்று ஆலோசித்த பின் தொற்றை முற்றிலும் காட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை விரைவில் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் கொரோனாவால் எந்த ஒரு உயிரும் இழக்க கூடாது என தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. அதேநேரத்தில் பொதுமக்களும் சமூக விதிகளை பின்பற்ற வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வுக்காக 24 மணி நேரமும் கொரோனா கட்டுப்பாடு மையம் செயல்படும் என்றார்.

அதனைத்தொடந்து கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர், பூண்டி தங்கம்மாள் தெரு, அரசு மீனவர் குடியிருப்பு பகுதி, புதுமனைகுப்பம், உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கொரோனா முகாம்களை இரண்டாம் நாளாக ஆய்வு செய்து அனைவருக்கும் முககவசம் மற்றும் கபசுர நீரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கொரோனா சிறப்பு அதிகாரி கே.பி.கார்த்திகேயன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் க.சுப்புலட்சுமி, மல்லிகா, மண்டல நல அலுவலர் குமரகுருபரன், மண்டல மருத்துவ அலுவலர் கயல்விழி, மற்றும் பகுதி செயலாளர் ஆர்.எஸ். ஜெனார்தனம், மற்றும் வட்ட செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.