மதுரை

500 மேடை இசைக்கலைஞர்களுக்கு நிவாரண தொகுப்பு – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வழங்கினார்

மதுரை

500 மேடை இசைக்கலைஞர்களுக்கு நிவாரண தொகுப்பினை மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நிவாரண பொருட்களை மேலூர், திருப்பரங்குன்றம், ஒத்தக்கடை, திருநகர், ஹார்விபட்டி, அவனியாபுரம், கருப்பாயூரணி, உள்ளிட்ட பகுதிகளில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கி வருகிறார். இதனையொட்டி பாண்டி கோயில் அருகே 500 மேடை இசைக்கலைஞர்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா தெரிவித்ததாவது;-

இந்த மூன்று மாதத்தில் உலகம் முழுவதும் இந்த தொற்றுநோயால் 75 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு 4 லட்சம் மக்கள் பலியாகி உள்ளனர். நமது தமிழகத்தை எடுத்துக் கொண்டால் முதலமைச்சரின் நிர்வாகத் திறமையால் இந்த நோயின் தொற்று குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உயிரிழப்பு குறைவாகவும், இந்த நோயினால் குணமடைந்தவர்கள் அதிகமாகவும் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. மேலும் இந்தியாவில் 29 மாநிலங்களில் அதிகமான நபர்களுக்கு சோதனை செய்த மாநிலமாக தமிழகம் உள்ளது. எதிர்க்கட்சிகள் எல்லாம் மக்களிடத்தில் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தவறான பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.