திருநெல்வேலி

அங்கன்வாடி மைய கட்டிடம், பேவர் பிளாக் சாலைப்பணி – இன்பதுரை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி சீயோன் மலை கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை இன்பதுரை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

முதல்வரின் உத்தரவுக்கு இணங்க நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி வள்ளியூர் யூனியனுக்குட்பட்ட சீயோன் மலை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 11 லட்சம் மதிப்பீட்டிலான பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.6 லட்சம் செலவில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா ஆகியவை நேற்று மாலை சீயோன்மலை கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் புதிய பேவர் பிளாக் சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சீயோன்மலை கிராமத்தைச் சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரணமாக அரிசி பைகளை இன்பதுரை எம்.எல்.ஏ வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக வள்ளியூர் ஒன்றியம் வைத்தியலிங்கபுரம்−தங்கையம் வில்வனம்புதூர் கோவன்குளம் ஆகிய ஊர்களுக்கு நேற்று மாலை நேரடியாக சென்ற சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை அந்த பகுதிகளில் வசிக்கும் 700 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து அரிசி பைகளை வழங்கினார். நேற்று காலை ராதாபுரம் ஒன்றியம் அணைக்கரை புலிக்குளம் பெருங்குளம் தனக்கர்குளம் பகுதிகளில் வசிக்கும் 600 குடும்பத்தினர்களை சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நேரில் சந்தித்து ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி பைகளை வழங்கினார்.

இந்நிகழ்வுகளில் வள்ளியூர் ஒன்றிய கழகச் செயலாளர் அழகானந்தம், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா மற்றும் ராதாபுரம் முருகேசன், பொன்செல்வன், கண்ணநல்லூர் சந்திரசேகர் மற்றும் உவரி ரமேஷ் கோட்டை கபாலீஸ்வரன், தனமூர்த்தி ரெஜினாள்மேரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.