தற்போதைய செய்திகள்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி புதிய கட்டிடம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் புதிய கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாயர்புரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாவட்ட அறநிலையத்துறைத்தலைவர் பி.மோகன் முன்னாள் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் த.அறவாழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு புதிதாக கட்டப்பட்ட கூட்டுறவு வங்கியை திறந்து வைத்தார்.

ஏற்கனவே தற்போது கட்டப்பட்டுள்ள புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பின்புறம் கடந்த 50, ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் இயங்கி வந்த இந்த கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இருந்த காரணத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ.வின் தீவிர முயற்சி காரணமாக தற்போது புதிதாக புது பொலிவுடன் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வாடிக்கையாளர்கள் வசதிக்காக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட பனைவெல்ல கூட்டுறவு விற்பனையக தலைவர் த.தாமோதரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் சிவத்தையாபுரம் விவசாயிகள சங்கதலைவர் குணசேகரன், பாலஜெயம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் காசிராஜன், மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் இரவிச்சந்திரன், கூட்டுறவு துணைப்பதிவாளர் சுப்புராஜ், சாயர்புரம் கூட்டுறவு வங்கி செயலர் சகுந்தலாதேவி, வங்கியின் துணைத் தலைவர் பண்டாரம், வங்கியின் இயக்குநர்கள் தங்கவேல், பிரேம்குமார், பண்டாரம், ராஜசேகர், தேவதாஸ், வாசுகி, சுசிலா, பெரிய செல்வம், ஜானகி, கே.ஜே.பிரபாகர், வலசை வெயிலுமுத்து, டென்சிங், ஜான்சன் தேவராஜ், சாம்ராஜ், மனுவேல் ராஜ், வெங்கடேஷ், பட்டு ராஜா,பிராங்கிளின், நிவின், தூத்துக்குடி மாநகர எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பி.ஜெகதீஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.