தற்போதைய செய்திகள்

சேவூரில் ரூ.1 கோடியில் சாலை, கால்வாய் பணி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூரில் ஒரு கோடியே 2 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைத்தல், பக்க கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் காலனி பகுதியில் ஒரு கோடியே 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைத்தல், பக்க கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் துவங்க அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை துவக்க அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேவூர் காலனி பகுதியில் சிமென்ட் சாலைகள், பக்க கால்வாய்கள், அமைத்து தரும்படி அப்பகுதியினர் கோரிக்கை வைத்ததின் பேரில் உடனடியாக ஆரணி ஒன்றிய அதிகாரிகளை அழைத்து மதிப்பீடு செய்யப்பட்டது. அதன்பேரில் 1230 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் சாலைகளும், 1470 மீட்டர் நீளத்திற்கு பக்க கால்வாய்களும் அமைக்கப்படவுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி.சேகர், அரசு வழக்கறிஞர் க.சங்கர், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர செயலாளர் எ.அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், வி.பி.ராதாகிருஷ்ணன், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் எம்.வேலு, மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் டி.கருணாகரன், பட்டு கூட்டுறவு சங்கத்தலைவர்கள் சேவூர் ஜெ.சம்பத், பாலசந்தர், முன்னாள் தலைவர்கள் வெங்கடேசன், பெருமாள், சேவூர் நிர்வாகிகள் தனராஜ், புருஷோத்தமன், பீமன் என்கிற ரவி, சங்கர், உதயசங்கர், ஒப்பந்ததாரர் ஜி.மோகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.