தற்போதைய செய்திகள்

197 மகளிர் குழுக்களுக்கு ரூ.4.48 கோடி கடன் உதவி – அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்

சிவகங்கை

சிவகங்கையில் கொரோனா தடுப்பு சிறப்பு நிவாரண உதவியாக கூட்டுறவுத்துறை மூலம் மூலம் 197 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.4.48 கோடி கடன் உதவியை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் தலைமையில், மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகராஜ் முன்னிலையில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பஸ்கரன் பங்கேற்று 197 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.48 கோடி கடன் உதவியை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசுகையில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ஆயிரமும், விலையில்லா பொருட்களையும் வழங்கினார்.

தமிழக அரசு கொரோனா வைரஸிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இன்று நமது மாவட்டத்திற்கு ரூ. 4.40 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்கி இருக்கிறோம். தமிழக அரசு அளிக்கும் நலத்திட்ட உதவிகளை பெண்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், துணைத்தலைவர் ராஜா, மகளிர் திட்ட இயக்குனர் அருள்மணி, கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், கூட்டுறவு வங்கி மண்டல இணை இயக்குனர் பரமேஸ்வரி, சிவகங்கை ஒன்றிய பெருந்தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், கூட்டுறவுத் துறை துணைப்பதிவாளர் ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.