பெரம்பலூர்

புஜங்கராயநல்லூரில் ரூ.75 லட்சம் மதிப்பில் சாலை பணி – ஆர்.டி.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், புஜங்கராயநல்லூரில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புஜங்கராயநல்லூர் முதல் ரசுலாபுரம் வரை உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தானர்.

அந்த கோரிக்கையை பரிசீலனை செய்த குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்றார். கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் புஜங்கராயநல்லூர் முதல் ரசுலாபுரம் வரை உள்ள மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்க ஒப்புதல் அளித்தார்.

அதன்படி தார்சாலை அமைக்கும் பணியை பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். புதிய தார்சாலை அமைக்க எடுத்த நடவடிக்கைக்காக முதலமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கர்ணன், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலய மணி, லட்சுமி, பொறியாளர் பிரபாகரன் கர்ணன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் வெண்ணிலாராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் ஸ்டாலின், ஒன்றிய இளைஞரணி செயலாளர் நாகராஜ், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ராஜ்குமார், காரை ஊராட்சி மன்ற தலைவர் கலையரசன், ஒன்றிய பேரவை செயலாளர் சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.