தற்போதைய செய்திகள்

46 மகளிர் குழுக்களுக்கு ரூ.58 லட்சம் கடன் உதவி – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட காரப்பட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் கோவிட் 19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் கடன் வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை தெற்கு எம்ஜிஆர் மன்ற மாவட்ட கழக செயலாளரும், கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 46 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் வட்டி இல்லாமல் திருப்பி செலுத்தும் கடன் உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கடன் உதவிகளை பெற்றுச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட கவுன்சிலர் தவமணி, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, கடலாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், கூட்டுறவு சங்க செயலாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.