திருவள்ளூர்

அம்பத்தூரில் ரூ.2 கோடி மதிப்பில் குடிமராமத்து பணி – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

அம்பத்தூர்:-

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டரவாக்கம் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி கரை அமைக்கும் பணி மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் நடைபயிற்சி பாதை ஆகிய பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார்.

பின்னர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ செய்தியாளரிடம் கூறும்போது:-

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய சுமார் 11 கோயில் குளங்களில் கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் ஆணைக்கிணங்க ஆழப்படுத்தி தூர்வாரப்பட்டு குடிமராமத்து பணிகள் நடைபெற்றது.

அதன் மூலம் இன்று அந்த குளங்களில் எல்லாம் மழைநீர் தேங்கி நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதோடு பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் நீர் ஆதாரம் காணப்படுகிறது.

இவ்வாறு வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தராஜ், அம்பத்தூர் மண்டல அலுவலர் தமிழ்ச்செல்வன் செயற்பொறியாளர் சுந்தரேசன், மற்றும் அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் என்.அய்யனார், முகப்பேர் எஸ்.பாலன், டன்லப் வேலன், ஜான், சலீம், எல்.என் சரவணன், எல்.ஜி.பிரகாஷ், பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.