தூத்துக்குடி

மகளிர் குழுக்களுக்கு ரூ.37.50 லட்சம் கடன் உதவி – எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37.50 லட்சம் கடன் உதவிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆஷா சண்முகநாதன் தலைமையில் பண்டாரவிளை கிளை வங்கியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வங்கி துணைத்தலைவர் சந்திரபால், வங்கி செயலாளர் தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழக்களுக்கு கடனுதவிகள் வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் வேதமாணிக்கம், மந்திரம், ஐயாக்குட்டி, ரவிச்சந்திரன், சந்தரலிங்கம், சேர்ந்தபாண்டி, கலாவதி, எமிலி அமுதா, அனந்தம்மாள், வங்கிப் பணியாளர்கள் ராஜலட்சுமி, செல்வி, ரவிச்சந்திரன், அருணாச்சலம், மாரியப்பன், பெருங்குளம் கழக பிரமுகர்கள் பண்டாரவிளை பாஸ்கர், பால்துரை, சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வங்கியின் கிளை மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.