கன்னியாகுமரி

வீட்டுக்கூரையை சீரமைக்க ரூ.30 ஆயிரம் நிதியுதவி – ஏழை பெண்ணுக்கு என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்

கன்னியாகுமரி

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், தடிக்காரங்கோணம் ஊராட்சிக்குட்பட்ட, வாழையத்துவயல் காணிகுடியிருப்பை சார்ந்த, சீதாலெட்சுமி என்பவரின் வீட்டு மேற்கூரை இடிந்தமைக்காக தனது சொந்த நிதியிலிருந்து மேற்கூறை அமைக்க ரூ.30 ஆயிரம் வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், தடிக்காரங்கோணம் ஊராட்சிக்குட்பட்ட, வாழையத்துவயல் காணிகுடியிருப்பை சார்ந்த, சீதாலெட்சுமி என்பவரின் வீட்டு மேற்கூரை இடிந்தமைக்காக, தனது சொந்த நிதியிலிருந்து, மேற்கூரை அமைக்க ரூ.30 ஆயிரத்தினை நேற்று வழங்கினார். முன்னதாக, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், வாழையத்துவயல் புதுநகரில், பெருஞ்சாணிகாயலில் ரூ.70 லட்சம் மதிப்பில் 2 கி.மீ தூரம் தடுப்புசுவர் மற்றும் கருந்தளம் அமைக்கப்படவுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

முன்னதாக, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், தேரேகால்புதூர் ஊராட்சிக்குட்பட்ட புரவசேரியில் 100 ஏழை, எளிய பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணமாக தலா 5 கிலோ அரிசியை வழங்கினார். மேலும், தேரேகால்புதூர் ஊராட்சிக்குட்பட்ட புரவசேரி முன்னாள் கிளை செயலாளர் காலம்சென்ற நாகப்பன் மனைவி சுலோச்சனாவுக்கு நிதியுதவியாக ரூ.10 ஆயிரத்தை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் கே.சரவணகுமார் முன்னிலையில், மாநகராட்சி சார்பில், கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு, வடிவீஸ்வரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற, கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையினை  துவக்கி வைத்தார்.