தமிழகம்

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவு – சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக பேரவை தலைவர் அறிவிக்கை

சென்னை

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் மறைவு காரணமாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக பேரவை தலைவர் ப.தனபால் அறிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கடந்த 2ம்தேதி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 10ம்தேதி அவர் உயிரிழந்தார். அன்பழகனின் மறைவைத் தொடர்ந்து சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பழகனின் மறைவு காரணமாக அத்தொகுதி காலியாக இருப்பதாக பேரவை தலைவர் ப.தனபால் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.