தற்போதைய செய்திகள்

ஆரணி ஒன்றியத்தில் குப்பைகளை சேகரிக்க 41 பேட்டரி வாகனங்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை

ஆரணி ஒன்றியத்தில் குப்பைகளை சேகரிக்க சேவூரில் 41 பேட்டரி வாகனங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிப்பதற்காக 41 பேட்டரி வாகனங்களை சேவூரில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிராமங்களில் உள்ள தெருக்கள் சிறியதாக இருந்தாலும் அந்த தெருவினுள் சென்று குப்பைகளை அகற்றி வாகனத்தில் எடுத்து வருவதற்காக தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் பேட்டரியில் இயங்கக் கூடிய பேட்டரி வாகனங்கள் முதற்கட்டமாக 11 ஊராட்சிகளுக்கு 41 வாகனங்கள் இயக்கப்படுகிறது. படிப்படியாக மற்ற கிராமங்களுக்கும் வாகனங்கள் வரவுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி.சேகர், நகர செயலாளர் எ.அசோக்குமார், பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடிதிருமால், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், சேவூர் ஊராட்சித்தலைவர் ஷாமிளா தரணி, துணைத்தலைவர் குமரவேல், கிளை செயலாளர் பாலசந்தர், முன்னாள் தலைவர் பெருமாள், வார்டு உறுப்பினர்கள் பீமன் என்கிற ரவி, சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, பொறியாளர் மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.