தற்போதைய செய்திகள்

பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.36 ஆயிரம் நிதியுதவி – அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார்

அம்பத்தூர்

மறைந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு உதவிதொகையாக ரூபாய் 36 ஆயிரத்தை அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்சாண்டர் வழங்கினார்.

அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் சீதாராமன் வயது 75. இவர் கடந்த 30 வருடங்களாக அம்பத்தூரில் இந்தியன் நியூஸ் என்ற பத்திரிகையை சொந்தமாக நடத்தி வந்தார் கடந்த வாரம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் அவரது படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை திருமுல்லைவாயலில் அவரது வீட்டில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ, சீத்தாராமன் மனைவிக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொண்டு குடும்பத்திற்கு உதவித்தொகையாக ரூபாய் 36 ஆயிரம் ரொக்கத்தை வழங்கினார். மேலும் வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை
அணுகுமாறு பணிவுடன் கூறினார்.

நிவாரண தொகையை பெற்றுக் கொண்ட சீதாராமனின் மனைவி நன்றி தெரிவித்தார் பத்திரிகையாளர் மரணத்திற்கு ரூபாய் 36,000 நிதி வழங்கிய வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ.வுக்கு அம்பத்தூர் ஆவடி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.