தற்போதைய செய்திகள்

கயத்தார் திருமலாபுரம் பகுதியில் ரூ.5 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டும் பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

கயத்தார் திருமலாபுரம் பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டும் பணியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் ஒன்றியத்துக்குட்பட்ட கயத்தார்- கடம்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருமலாபுரம் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று திருமலாபுரம் விலக்கில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறநிலையத்துறை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.மோகன் ஆகியோர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ பயணிகள் நிழற்குடை கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன், கயத்தார் ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், கயத்தார் நகர செயலாளர் கப்பல் ராமசாமி, கயத்தார் பேரூராட்சி செயல் அலுவலர் ஜோதிபாசு, கிளை கழகச் செயலாளர் சுப்புராஜ், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், மாவட்ட வர்த்தக அணி தலைவரும், கோவில்பட்டி தனலட்சுமி ஹோட்டல் உரிமையாளருமான விஜயராஜ், தூத்துக்குடி பெருநகர எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பி.ஜெகதீஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.