தற்போதைய செய்திகள்

எண்ணூரில் 350 ஏழை குடும்பங்களுக்கு நிவாரணம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

அம்பத்தூர்

எண்ணூரில் 350 ஏழை குடும்பங்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் ஏற்பாட்டில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிவாரண பொருட்களை வழங்கினார்.

திருவொற்றியூரில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் சிரமப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை தலைமை கழகம் உத்தரவுபடி முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் தொடர்ச்சியாக கிராமம் கிராமமாக சென்று வழங்கி வருகிறார்.

இதுவரை 50 ஆயிரம் நபர்களுக்கு மேல் அரிசி, பருப்பு போன்ற நிவாரண உதவிகளை அவர் வழங்கி உள்ளார்.

வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வரால் அறிவிக்கப்பட்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று கழகம் சார்பில் எண்ணூர் பெரிய குப்பத்தில் நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். அரிசி, பருப்பு, காய்கறி, பால், பிரெட் போன்ற பொருட்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். 350க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் இதனால் பலன் அடைந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் வேலாயுதம், கண்ணன், சங்கர், புகழேந்தி, தினேஷ் மற்றும் கிராம நிர்வாகிகள் உட்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.