தற்போதைய செய்திகள்

ஆர்.கே.நகரில் 500 குடும்பங்களுக்கு நிவாரணம் – அமைச்சர் க.பாண்டியராஜன், ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினர்

சென்னை

ஆர்.கே.நகர் பகுதி வ.உ.சி. நகர் பகுதியில் 500 கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பினை அமைச்சர் க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோர் வழங்கினர்.

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.கே.நகர் 40 வது வட்டம் வ.உ.சி. நகர் மீனவர் குடியிருப்பை சேர்ந்த 500 கூலித்தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோர் தலா 5 கிலோ அரிசி தொகுப்புடன் 5 வகையான காய்கறிகள் அடங்கிய நிவாரண அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இதனைத் தொடர்ந்து வீடு, வீடாக சென்று கபசுர நீர், மற்றும் மூலிகை பொடி, பாதுகாப்பு முககவசங்களை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

அம்மா அவர்களின் ஆன்மாவின் நினைவாக உள்ள இப்பகுதியில் கொரோனா தொற்று தடுப்பு பணி வேகமாக நடைபெற்று வருவதுடன் சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் மைக்ரா பிளான் திட்டப்படி இன்றைய தினம் தமிழகத்தில் 16.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு 86 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதம் உள்ள 14 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 7282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் தற்போது ஆக்டிவ் கேஸ் 1006 பேர் தான் உள்ளனர். அவர்களும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளனர். தற்போது சென்னையில் நோய் தொற்று குறைந்துள்ளது. இதேபோன்று செங்கல்பட்டு, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் நோய் தொற்றை தடுக்க அரசின் சார்பில் 2 கோடி முககவசங்கள் வழங்கும் பணியும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் அதிக அன்னிய முதலீடுகளை பெற்று முதன்மை மாநிலமாக விளங்கிவருவதாக பாரத பிரதமர் மோடி அறிவித்தார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சரின் பணியும் சிறப்பாக நடந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே கொரோனா நிவாரண பணிகளுடன் கட்சி பணிகளை தொடங்கி விட்டோம் மக்கள் எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர் இங்குள்ள எங்களது கழக தொண்டர்கள் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தில் தான் கட்சி பணியுடன் இந்த நிவாரண பணியும் நடைபெற்று வருவதாக அப்போது தெரிவித்தார்.

முன்னதாக ஆர்.எஸ். ராஜேஷ், பேசுகையில், ஆர்.கே.நகர் தொகுதி மறைந்த புனிதவதி முதல்வர் அம்மாவின் தொகுதி பார்த்து வா என்றால் சாய்த்து வரும் கூட்டம் மக்கள் பணிகளுடன் கொரோனா தடுப்பு பணிகளில் முழு ஈடுபாட்டுடன் களத்தில் பாடுபட்டு வரும் மாவட்ட கழகத்தினரின் செயல்பாடு தான் தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனாவை ஒழிக்க முக்கிய பங்கு வகித்தது

தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரது வழிகாட்டுதலின்படி கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்று தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அமைச்சரின் கொரோனா தடுப்பு ஆய்வு பணியால் தண்டையார்பேட்டை மண்டலத்தில் நோய் தொற்று குறைந்து இன்று பலர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். காவல்துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறை, முன்களப்பணியாளர்களுடன் இணைந்து இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா தொற்று இல்லாத மண்டலமாக தண்டையார்பேட்டை மாறும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ஜெனார்தனம், ஏ.கணேசன், இ.வேலுமேஸ்திரி, வி.எஸ்.புருஷோத்தமன், ஜெ.எம்.நரசிம்மன், ஏ.வினாயகமூர்த்தி, எம்.வேலு, எல்.எஸ்.மகேஷ்குமார், இரா.முரளிமுருகன், இஎம்எஸ் நிர்மல் குமார், டி.பிரபாகரன், மெக்கானிக் வெங்கடேசன், ஒ.ஏ.ரவிராஜன், ஆர்.சிவகுமார், ஏ.இளவரசன், டி.எம்.ஜி.பாபு, ஏ.சேகர், புலிமுருகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.