தற்போதைய செய்திகள்

சோதனைச்சாவடியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர்கள் 4 பேரிடம் அமைச்சர் நலம் விசாரிப்பு

மதுரை

சோதனைச்சாவடியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 காவலர்களை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

மதுரை மாவட்ட நுழைவாயிலான கொட்டாம்பட்டி அடுத்த சூரப்பட்டியில் உள்ள சோதனை சாவடியில் கெரோனா நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மதுரை மாவட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நின்ற வாகனம் மீது பின்னே வந்த சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சார்பு ஆய்வாளர் கலா சேகர், தலைமை காவலர் அழகுராஜா, பட்டாலியன் காவலர்கள் சிலம்பரசன், ஈஸ்வரன் ஆகிய 4 பேர் தூக்கி வீசப்பட்டு தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்துள்ளனர்.

அவர்கள் அரசு இராஜாஜி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர்களை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் ஆகியோர் 14.06.2020 அன்று நேரில் சென்று நலம் விசாரித்தனர். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்குமணி ஆகியோர் உடன் இருந்தனர்.