திருப்பூர்

திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் கடைகள் அமைக்கும் பணி – சு.குணசேகரன் எம்.எல்.ஏ ஆய்வு

திருப்பூர்

திருப்பூர் காட்டன் மார்க்கெட்டில் அமைக்கப்பட உள்ள தற்காலிக தினசரி காய்கறி மார்க்கெட் கடைகளில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்துவதற்காக திருப்பூர் தினசரி மார்க்கெட் இடிக்கப்பட உள்ளது. இதற்காக தினசரி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் 400க்கும் அதிகமான காய்கறி வியாபாரிகளுக்கு திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்படுகிறது.

400க்கும் மேற்பட்ட கடைகளில் தினசரி வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்ய வசதியாக, தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டு, கடைகள் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் ஆய்வு செய்தார்.

கடைகளை பார்வையிட்ட அவர், அங்கு செய்யப்பட வேண்டிய அடிப்படை தேவைகளுக்கான கட்டுமானங்கள், பாதைகளை விரைவில் செய்து முடிக்கவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் கண்ணன், அர்பன் பேங்க் தலைவர் சடையப்பன், மாநகராட்சி அலுவலர் சண்முகம், காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.