கோவை

மகளிர் குழுக்களுக்களுக்கு 1.34 கோடி கடன் உதவி – ஒ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்களுக்கு ரூ. 1 கோடியே 34 லட்சம் மதிப்பில் வங்கி கடன் உதவியை ஒ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்.

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை அமைத்திடவும் ரூ. 1 கோடியே 34 லட்சம் மதிப்பில் வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் ஒ.கே.சின்னராஜ் தலைமையில் காரமடையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது

இதில் 135 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த மகளிர்க்கு ரூ. 1 கோடியே 28 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் நேரடி கடன் ஆதார நிதி சமுதாய முதலீட்டு நிதியாகவும், தனிநபர் கடனாக மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்ற மாற்றுத்திறனாளிகள் 56 பேருக்கு ரூ. 5 லட்சத்து 30 ஆயிரமும் மொத்தம் ரூ.1 கோடியே 34 லட்சத்து 5 ஆயிரம் ருபாய் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் குமரவேல், ஏ.கே.செல்வராஜ், ஒன்றிய பெருத்தலைவர் மணிமேகலை மகேந்திரன், மாவட்ட கவுன்சிலர் பி.டி.கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சைலஜா, சந்திரா, சுரேஷ்குமார், அப்துல்லா, மாவட்ட கவுன்சிலர் சங்கீதா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம், நிர்மலா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.