தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் – முதலமைச்சரின் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

சென்னை

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருப்பதை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பெண்களை பின்தொடர்வோருக்கான தண்டனை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை பெரிதும் உதவியாக இருக்கும்.

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கே.எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. விழுப்புரம் மாவட்டத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு புதிய பல்கலைக்கழகம் வழிவகுக்கும். விழுப்புரத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்திற்கு மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபட்டவரும், பேரறிஞர் அண்ணாவின் நண்பருமான ஏ.கோவிந்தசாமியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.