தற்போதைய செய்திகள்

3 கால்நடை மருத்துவ கல்லூரிகள் அறிவிப்பு – சரித்திர சாதனை படைத்து வரும் முதலமைச்சருக்கு அமைச்சர் நன்றி

சென்னை

கால்நடை பராமரிப்புத் துறைக்கு 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள் அறிவித்த முதலமைச்சருக்கு, அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆற்றிய உரை வருமாறு:-

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பொற்கால ஆட்சியை சீரும் சிறப்புமாக வழி நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகளின் விடிவெள்ளி, சாமானியர்களின் சாதனை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில், தமிழகம் எல்லாத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில், தமிழக வரலாற்றில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு சரித்திர சாதனையாக இந்த ஆண்டு மட்டும் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகள்:-

1. சேலம் மாவட்டம், தலைவாசலில் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்கா ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வளாகத்தில் ரூ.213 கோடி மதிப்பீட்டில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி,

2. துணை முதலமைச்சரின் மாவட்டமான தேனி மாவட்டம் வீரபாண்டியில் ரூ.254 கோடி முதலீட்டில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி,

3. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பண்ணைக்கிணற்றில் ரூ.253 கோடி மதிப்பீட்டில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி.

இதுபோன்று சரித்திர சாதனை படைத்து வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, உடுமலைப்பேட்டை தொகுதியில் ஒரு கல்லூரி வழங்கியதற்கு, என் சார்பாகவும், எனது தொகுதி மக்கள் சார்பாகவும் கோடானகோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.