தமிழகம்

அமைச்சர் ஜி.பாஸ்கரன் சகோதரி மறைவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல்

சென்னை

அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சகோதரி மறைவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரனின் அன்பு சகோதரி வசந்தாள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

வசந்தாளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வசந்தாளின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.இதேபோல் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கதர்த்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சகோதரி வசந்தாள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.