தமிழகம்

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை

நல்ல பலத்தையும், ஆரோக்கியத்தை இறைவன் அளிக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, மலர் கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நம் தேசத்திற்கு சேவை செய்ய இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் இறைவன் அளிக்க வேண்டுமென்று நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.