தற்போதைய செய்திகள்

கழகம் வரலாற்று சாதனை படைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆர்.எஸ்.ராஜேஷ் சூளுரை

சென்னை

2021 தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் சூளுரைத்துள்ளனர்.

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் தண்டையார்பேட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் அம்மா பேரவை உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம், ஆலோசனை கூட்டம் கழக அம்மா பேரவை செயலாளரும். வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் சேர்ப்பு படிவங்களை வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்,

தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள முதலமைச்சர் எடப்பாடியார் மாணவ சமுதாயத்தினரின் விடிவெள்ளியாக திகழ்ந்து வருகிறார். தமிழக மக்களின் வாழ்வாதாரம் சிறக்க பாடுபடும் இயக்கம் அ.தி.மு.க. இதன் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுகவினர் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை கூறி மக்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர் அ.தி.மு.க.வில் கடைசி தொண்டன் இருக்கும் வரை தி.மு.க.வினரின் எண்ணம் நிறைவேறாது. அவர்கள் ஆட்சிக்கும் வரமுடியாது. கட்சி பணிக்கு உண்மையாக வருபவர்களை ஊக்குவிக்கும் இயக்கம் அதிமுக. வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றிபெற்று 2021ல் கழகம் வரலாற்று சாதனை படைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்.

முன்னதாக பேசிய, ஆர்.எஸ்.ராஜேஷ், ஆர்.கே.நகர் தொகுதி அம்மாவின் தொகுதி. அம்மா ஆசியால் வளர்க்கப்பட்ட தொண்டர்கள் ஒன்றிணைந்து கழக பணியாற்றி வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் கழகம் மாபெரும் வெற்றிபெற நாம் உறுதி ஏற்போம் என்றார். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் முகில், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ரமேஷ், ஆர்.எஸ். ஜெனார்தனம், ஜெ.கே.ரமேஷ், ஏ.கணேசன் மாவட்ட பேரவை செயலாளர் ஏ.டேவிட் ஞானசேகரன், வியாசை எம்.இளங்கோவன், தனபால் நகர் சிவகுமார், பி.ஜே.பாஸ்கர், எம்.விஜயகுமார், எம்.மகேந்திரமணி, ஆக்கம் அகஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.