தற்போதைய செய்திகள்

திமுகவின் பொய் மூட்டைகளை உடைத்தெறியும் ஈட்டியாக கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயல்படும் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. முழக்கம்

அம்பத்தூர்

திமுகவின் பொய் மூட்டைகளை உடைத்தெறியும் ஈட்டியாக கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயல்படும் என திருவள்ளூர் மத்திய மாவட்டம் மதுரவாயல் பகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவள்ளூர் மத்திய மாவட்டம் மதுரவாயில் பகுதி 144, 145, 146, 147, 148 ஆகிய ஐந்து வட்டங்களை சார்ந்த இளைஞர் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாம் ஊரக தொழில் துறை அமைச்சரும் மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான பா.பென்ஜமின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.ஒய்.மகேஸ் பிரபு வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி கழகத்தில் புதிதாக சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு உறுப்பினர் வடிவங்களை வழங்கினார்.

பின்னர் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

திமுகவில் வாரிசு அரசியல் மட்டும்தான் நடைபெறுகிறது. ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அரசியல் இன்றி கண்ணியம் காக்கப்பட்டு வருகிறது அதற்கு தனது 21 வயதில் கிளைக் கழக செயலராக பணியை ஆரம்பித்து இன்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்துள்ள நமது முதலமைச்சர் தான் சான்று அதே போன்று இங்குள்ள ஊரக தொழில்துறை அமைச்சர் கிளைக் கழகச் செயலாளர் ஒன்றிய கழக செயலாளர் நகர கழக செயலாளர் பகுதி கழக செயலாளர் இன்று மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் துணை மேயர் அமைச்சர் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டும் தான் சமதர்மம் பேணிக் காக்கப்படுகிறது தொண்டர்கள் அனைவருக்கும் பதவிகளைத் தரும் இயக்கமாக செயல்படுகிறது.

இன்று இந்திய மாநிலத்திலேயே காங்கிரஸ் பாஜக கம்யூனிஸ்ட் போன்ற பல்வேறு கட்சிகள் ஆளுகின்ற மாநிலத்தில் கூட நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆனால் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான் நீட் தேர்வு என்ற விஷயம் பாராளுமன்றத்தில் எழும்போது அங்கு திமுகவைச் சேர்ந்த காந்தி செல்வன் என்ற எம் பி.தான் சுகாதாரத்துறை இணை அமைச்சராக பணியாற்றி வந்தார் எல்லாம் மறைத்து பல்வேறு பொய்களை மு.க.ஸ்டாலின் இன்று மாணவ சமுதாயத்திடம் கூறிவருகிறார் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் கூட ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொரோனா களப்பணிகள் குறித்து முதலமைச்சர், அமைச்சர்கள் வரை மக்கள் நல பணிகளை செய்து வருகிறார்கள்.

ஆனால் இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கொரோனா குறித்து ஆய்வு செய்யும் தலைவராகவும் அதிலேயே கட்சி நடத்தும் தலைவராகவும் மு க ஸ்டாலின் திகழ்கிறார் கடந்த 2007-ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பல்வேறு சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெற ஏதுவாக அமைந்தது அந்தவகையில் திமுகவின் அத்தனை பொய்களையும் உடைத்திடும் ஈட்டியாக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயல்படும்.

இவ்வாறு கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பேசினார்.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா, எஸ்.அப்துல் ரஹீம், நிர்வாகிகள் செவ்வை சம்பத்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஏ.மணிமாறன், புலவர் ரோஜா, தி.ப.கண்ணன், பி.ஜெயபால், காட்டுப்பாக்கம் திருநாவுக்கரசு, புட்லூர் சந்திரசேகர், ஜாவித் அகமது, அவைத்தலைவர் காசு ஜனார்த்தனன், எம்.எஸ்.அருள்யுகா, புலவர் ரோஜா வழக்கறிஞர் சூரியநாராயணன், இ.சி.சேகர், மதுரவாயலில் தேவதாஸ் என்.எம்.இமானுவேல், வளசை தாமோதரன், கந்தன், நெற்குன்றம் டி.சத்தியநாதன் எம்பி தென்றல் குமார் பாரத், குட்டி உட்பட மாவட்ட, கழக ஒன்றிய நகர கழக பகுதி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், ஊரகத் தொழில் துறை அமைச்சருமான பா.பென்ஜமின் சிறப்பாக செய்திருந்தார்.

147-வது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான மதுரவாயில் ஏ.தேவதாஸ் நன்றி உரையாற்றினார்,