விழுப்புரம்

புதிய பல்கலைக்கழகம் அறிவிப்பு – விழுப்புரத்தில் கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்

விழுப்புரம்

விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளதை வரவேற்று கழகத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வேலூரில் இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரம் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் எனவும், இந்த பல்கலைக்கழகம் இந்த ஆண்டிலேயே செயல்பட தொடங்கும் எனவும் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்றும், கழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கோலியனூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் விழுப்புரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் ஜி.ஜி.சுரேஷ்பாபு தலைமையில் கழகத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதோடு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சசிக்குமார், நாகமுத்து, ரவி, ராஜ், கலுவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கோலியனூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பேட்டை முருகன் தலைமையில் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கலியமூர்த்தி, இளைஞரணி செயலாளர் சேட்டு பார்த்தசாரதி, ஒன்றிய இணை செயலாளர்கள் கவிதா செந்தில்குமார், தட்சிணாமூர்த்தி, விவசாய அணி செயலாளர்கள் விஜயன், ராஜாமணி, ஒன்றிய துணை செயலாளர் தமிழ்மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சத்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.