தற்போதைய செய்திகள்

நீட் தேர்வுக்காக திமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வோம் என்று அழுத்தம் கொடுக்காதது ஏன்? பேரவையில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி

சென்னை

நீட் தேர்வுக்காக திமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வோம் என்று ஏன் அழுத்தம் தரவில்லை என்று பேரவையில் கழக எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கழக எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது:-

இந்த நல்ல சூழ்நிலையில் இன்றைக்கு நாங்கள் போற்றுகிற வாழ்த்துகிற பல்வேறு சாதனைகளை உருவாக்கிக் கொடுத்து இன்றைக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வழியிலே சாதனைகளை உருவாக்கிக் கொடுத்து இன்றைக்குப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியிலே, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியிலே மக்களின் மனத்தைக் கவர்ந்த புரட்சித் தலைவரும், ஆளுமைத் திறனும் அன்பையும் கொண்ட எங்கள் அம்மாவின் வழியிலே தமிழகத்தை நல்வழியில் மீட்டுத் தந்து குறிப்பாக, இன்றைக்கு எல்லா சாதனையும் செய்து சிறப்பித்து, சமூக நீதி காத்த வீராங்கனை என்று போற்றுகிற புரட்சித் தலைவி அம்மாவின் வழியிலே இன்றைக்குப் பலரால் கொண்டு வரப்பட நீட் தேர்விலே விதிவிலக்காக மிக அற்புதமான சட்டத்தை வடித்து 7.5 விழுக்காடு கிராமப்புற, நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி மாணவர்களை மகிழ்ச்சிக் கடலில் முதல்வர் மூழ்க வைத்துள்ளார்.

மிகப்பெரிய மாற்றம் செய்யவேண்டியிருக்கிறது. அந்த மாற்றத்தில் நம்முடைய முதலமைச்சர் மிகத் தெளிவாக இந்தப் புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்காக ஒரு கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்திருக்கிறார். இதனை நான் வரவேற்கிறேன். அதேபோன்று, உயர் கல்வித்துறையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நம்முடைய உயர் கல்வித் துரை அமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இருமொழிக் கொள்கை வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்கத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்பதையும் மிகத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

புதிய கல்விக் குழு ஆய்வு செய்து வருகிறது என்பதைப் பேரவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தவுடன் பழைய கல்விக் கொள்கையின் ஏனைய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொன்றை நான் நினைவூட்ட விரும்புகிறேன். 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து, சமூக நீதி காத்த வீராங்கனையாக திகழ்ந்த புரட்சித்தலைவி அம்மாவினுடைய வழியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசு, அவரது வழியில் நடக்கும் எங்களது அரசு எங்களது அரசு புதிய கொள்கை வாயிலாக சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம் மற்றும் சம நலம் ஆகியவற்றிற்கு பங்கம் ஏற்படுமேயானால்.

ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம். நாங்கள் கொடுக்கும் அழுத்தம் உங்களுக்குப் போராட்டமாக இருக்கிறது. நீங்களும்தான் போராடுகிறீர்கள். டெல்லிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுப் போயிருக்கிறீர்கள். நீங்கள் முறையாக, முழுமையாக அழுத்தம் கொடுத்திருந்தால், நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லியிருந்தால், அங்கே டெல்லிக்குச் சென்றிருக்கிற அத்தனை உறுப்பினர்களும் ராஜினாமா செய்வோம் என்று சொல்லி அழுத்தம் கொடுங்கள்.ஏன் அப்படிச் செய்யவில்லை.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.