சிறப்பு செய்திகள்

தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

சென்னை

தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி, தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று காலை 10.00 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி,

தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, அரசு தலைமைக் கொறடா எஸ்.இராஜேந்திரன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சி.பொன்னையன், அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம், சீர்மிகு பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் சத்யா, விருகை வி.என்.ரவி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்
மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.