திருப்பூர்

2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றிபெற பாடுவோம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சபதம்

திருப்பூர்

வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றிபெற பாடுபடுவோம் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சபதம் மேற்கொண்டார்.

திருப்பூர் புறநகர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி, உடுமலை மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர் கே.ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன் வரவேற்றார்.

கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை கூறி புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான படிவத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:-

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க இங்கு நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தின் நோக்கம் ஒவ்வொரு நகரம், ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் இளைஞர்களை கழகத்தில் உறுப்பினராக சேருங்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக பங்கு இளைஞர்களுக்கு தான் இருக்கும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2008-ம் ஆண்டு உருவாக்கினார்.

கழகத்தில் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் உறுப்பினராக இணைந்தனர். இளைஞர் இளம்பெண்கள் பாசறையினர் கடினமாக உழைத்தனர். அம்மா ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து சென்றனர். கழகம் 2011, 2016-ல் மாபெரும் வெற்றிபெற்றது.

இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினர் திமுகவின் அராஜகங்களையும், அம்மா வழியில் நடைபெறும் நல்லாட்சியில் நடைபெறும் நலத்திட்டங்களையும், அரசின் சாதனைகளையும் வீடு வீடாக எடுத்து செல்ல வேண்டும். 2021-ம் ஆண்டிலும் கழக அரசு மீண்டும் அமையஉழைக்க வேண்டும்.

தற்பொழுது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் எந்த இயக்கத்திலும் இல்லாத அளவிற்கு இந்த இயக்கம் வலுப்பெற்று கொண்டிருக்கிறது. இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் இல்லாத இந்த காலகட்டத்தில் 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றியை ஈடுபடவும், தமிழகத்தில் மூன்றாவது முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திடவும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பெரும்புகழையும், பெருமையையும், சிறப்பையும் தொடர்ந்து நிலைநாட்டவும் நாம் அனைவரும் சபதம் ஏற்று செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.