திருநெல்வேலி

கட்சிக்கு உண்மையாக உழைக்கும் தொண்டர்களை பதவி தேடி வரும் – அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன் பேச்சு

திருநெல்வேலி

கட்சிக்கு உண்மையாக உழைக்கும் தொண்டர்களை பதவிகள் தேடி வரும் என்று கழக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் கூறினார்.

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை பகுதி செயலாளர் ரஐனி வரவேற்றார். இக்கூட்டத்தில் அவைத்தலைவர் சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி சௌந்திரராஐன் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன் பேசியதாவது:-

இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது மற்ற மாவட்டங்களை விட நாம் அதிகமாக சேர்க்க வேண்டும். உறுப்பினர்களையும் சேர்க்கும் போது நீங்கள் நேரடியாக அங்கே சென்று சேர்க்கின்ற நபர் மாற்றுக்கட்சியில் இருக்கின்றாரா என்பதை விசாரித்து சேர்க்க வேண்டும். உண்மையாக உழைக்கின்ற உங்களுக்கு பதவி தேடி வரும் .

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொண்டர்களாக இருந்து உயர் பதவிக்கு வந்துள்ளனர். உங்களுடைய பணி கழகத்திற்கு வெற்றி கிடைக்க வழி வகுக்க வேண்டும். 2021-ல் கழகம் ஆட்சி அமைப்பது உறுதி. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பினரின் உன்னத உழைப்பு அவசியம்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் சுதாபரமசிவம் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபுப்ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்ட், மாவட்ட மாணவர் அணி செயலாளர் மகாராஜன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் காந்தி வெங்கடாஜலம், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் திருத்து சின்னதுரை, வட்ட செயலாளர்கள் நெல்லை மா.வெங்கட், அருமதுரை, பாண்டி, பரமன், வேல்பாண்டி, சின்னபாண்டி, எம்.சி.ராஐன், ஹயாத், ரசாக், ஏ.எஸ்.சங்கர், மேகை சக்திகுமார், நம்பி ஏசுதுரை, பாளை மஸ்தான், தச்சை பாலு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.