தமிழகம்

பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பயில உதவி செய்த கார்குடி தலைமையாசிரியைக்கு, துணைமுதலமைச்சர் பாராட்டு

சென்னை

பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி கற்க சேவையாற்றி வரும் உறைவிடப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

திக்கற்று தவிக்கும் எளிய பழங்குடியின மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்துவிட்டு அவர்களின் வாழ்வில் வழிகாட்டி ஒளியேற்றிக் கொண்டிருக்கும் நீலகிரி-கார்குடி அரசு பழங்குடியினர் உறைவிடப்பள்ளி தலைமை ஆசிரியை கலாவதியின் அளப்பரிய சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.