தற்போதைய செய்திகள்

நாடே வியக்கும் வகையில், முதலமைச்சர் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

ஈரோடு

நாடே வியக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறார் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தபாடி ஓடத்துறை, வைரமங்கலம், சின்னப்புலியூர், பெரியபுலியூர், ஆலத்தூர் ஊராட்சிப் பகுதிகளில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ரூ.10.28 கோடி மதிப்பீட்டில் 29 புதிய திட்டப்பணிகளை பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இந்தியாவே வியக்கத்தக்க வகையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தபாடி, பெரியபுலியூர், வைரமங்கலம் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் 7,693 வீடுகளுக்கு தனிநபர் குடிநீர் திட்டத்தின் கீழ் பூமிபூஜையிட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் திட்டப்பணிகள், சாலை மேம்பாடு, வடிகால் அமைத்தல், சிறுபாலம் கட்டுதல் என ரூ.10.23 கோடி மதிப்பீட்டில் 28 புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவாக உள்ளது. கொரோனா பரிசோதனைஅந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகிறது.மேலும் கொரோனா தொற்று காலத்தில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர்.கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் பவானி ஒன்றிய கழக செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் அய்யம்பாளையம் சரவணன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சிவகாமி சரவணன், கே.கே.விஸ்வநாதன், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவாதங்கமணி , துணைத் தலைவர் தீபிகா, கழக பொதுக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, சின்ன புலியூர் ஜெகதீஸ், ஆலத்தூர் கே.ஜெயப்பிரகாஷ், பெரிய புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணி ராசு, யூனியன் கவுன்சிலர் ஜானகி ஜெயபிரகாஷ், எஸ்.என்.ராசு, கே.என்.ஆறுமுகம், கவுந்தப்பாடி சிவக்குமார், ஜீவா ராஜசேகர், கவுன்சிலர் மணி சந்தோஷ் பரமசிவம், விஜயலட்சுமி, ஆர்.கே.விஜய், நல்லி விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்