தற்போதைய செய்திகள்

கழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர மாணவர் சமூகம் தயாராகி விட்டது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

சென்னை

ஆயுள் முழுக்க அம்மாவின் அரசுதான் இருக்கவேண்டும் என்று கழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர மாணவர் சமூகம் தயாராகிவிட்டது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

தென் சென்னை வடக்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் பேரவை உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தி.நகர் பி.சத்தியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக அம்மா பேரவை உறுப்பினர்கள் சேர்ப்பு முகாமினை துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

ஏழை, எளிய சாமானிய மக்களுக்காக , மன்னாதி மன்னன், மதுரை வீரன் புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக , தற்போது, 50 ஆண்டுகளைக் கடந்து வந்த நிலையில், ஒரு வாய்ப்பாக அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியாக உறுப்பினர் சேர்க்கை என்றால், அது, அண்ணா தொழிற்சங்கத்திற்குப் பேரவைக்கு வாய்ப்பு உள்ளது, இளைஞர்களுக்குஅங்கீகாரம், அடையாளம், ஆதரவு கரம் நீட்டுவதற்காக, அவர்கள் ஆரம்பத்திலேயே அங்கீரக்கிப்பட வேண்டும் என்பதற்காக, புரட்சித் தலைவிஅம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி பாசறை ஆகும்.

இந்த உறுப்பினர் படிவத்தில், அதிமுக என்று தான் இருக்கும், 50 ஆண்டுக் கால வரலாற்றில், 1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அதிமுக கட்சியில், முதன் முறையாக பாரத்தில், சாமானிய மக்களுக்காக, சரித்திரம் படைத்து வரும் முதல்வர், புரட்சித்தலைவி அம்மாவின் புகழையும், ஆட்சியைக் காத்து வரும் துணை முதல்வரும், எந்த ஒரு கட்சியும் தராத மிகச் சிறந்த அங்கீகாரத்தை, அதிமுகவில் தாயுள்ளதோடு தனியாக ஒரு விண்ணப்பப் படிவத்தை வழங்கியுள்ளோம்.

இன்று தமிழகம் முழுவதும், அந்தந்த மாவட்டச்ச் செயலாளர்கள், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் மூலம், அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்டச்ச் செயலாளர்கள், வீதி வீதியாக, கிளை வாரியாக, மாநகராட்சிகளில், வார்டு, கூடத்துகளாக, இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து, அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்குகிறார்கள்.

உறுப்பினர் சேர்க்கைக்கு என்ன அவசியம் வந்தது, வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், எந்த இயக்கும், புது ரத்தம் பாய்ச்சுதலோ, புதுப்பிக்கத்த் தவறியதோ , இளைஞர்களுக்கு அங்கீகாரம் தர மறுக்கிறதோ, அந்த இயக்கத்தின் ஆயுள் விரைவில் முடிந்து விடும். எந்த இயக்கம், புது ரத்தம் பாய்ச்சுகிறதோ, அது தான் காலம் கடந்து நிற்கிறது, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி காலங்களிலும், அண்ணன் எடப்பாடி ஆட்சியிலும், தாயுள்ளதோடு, இளைஞர்களை இரு கை கூப்பி, தம்பி வா, தலைமை ஏற்க வா என அண்ணாவின் வழியில் கூறும் இயக்கம் அதிமுக தான் உள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று திமுக சொல்கிறது, அது ஒன்றும் தவறில்லை, எப்படி வர முடியும், ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பே,புரட்சித் தலைவர் சொல்லியுள்ளார், தீய சக்தி கருணா நிதி என்று, தீய சக்தி, மக்கள் விரோத சக்தி, தேச விரோத சக்தி எனக் கூறுவதற்கு, அதிமுகவின் ரத்தத்திலேயே ஊறி விட்டன. இன்று கூட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் , ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். நாங்கள் தேச விரோத சக்தி இல்லை என்று. ஏன் இந்த தன்னிலை விளக்கம். பெரியார் பிறந்த நாளில் நாங்கள் தேச விரோத கட்சி இல்லை தமிழக மக்களின் உரிமையைக் கேட்கும் கட்சி என விளக்கம் கொடுத்துள்ளார்.

இதனால் திமுக ஒரு பரிதாப நிலையில் இருப்பதை இந்த நாட்டிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திமுக மக்கள் விரோத சக்தி. தேச விரோத சக்தி என மக்கள் மனதில் பதிந்து விட்டன. 50 அண்டுகளுக்கு முன்பு, திமுக, மக்கள் விரோத சக்தி, தேச விரோத சக்தி என சொல்லப்பட்டதோ, அதைத் தான், பாஜகவின் தேசிய தலைவரும் சொல்கிறார். நாங்கள் இந்திக்கு எதிர்ப்பு அல்ல, இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் என்று கூறுகிறாரே, சட்டப்பேரவையில், அண்ணன் முதல்வர் எடப்பாடியார், உணர்ச்சி வசமாய், உரக்கச் சொன்னாரே, நீட் தேர்வுக்கு யார் காரணம், அந்த விஷபாம்பை ஊருக்குள் விட்டது தான் காரணம் என ஆதாரத்துடன் எடுத்துச் சொன்னார்.

திமுகவால் பதில் சொல்ல முடிந்ததா, ஆதாரத்தை எடுத்துக்காட்ட முடிந்ததா? அதை மறுக்க முடிந்ததா? இப்போது , விஷப்பாம்பை ஊருக்குள்விட்டு, அது கடிக்கிறது, கொத்துகிறது என்றால், மாணவ சமுதாயத்தின் இழப்புக்குக் காரணம் திமுக தான் என ஆதாரத்துடன் , முதல்வர் சொல்லியுள்ளார். அப்போது, மத்தியில், திமுக அங்கம் வகிக்கும் போது, பதவி சுகத்திற்காக, நீட் தேர்வுக்கு, சிவப்பு கம்பலம் விரித்து விட்டு,இப்போது, உத்தமர்களாகப்ப் பேசினால், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மாணவ சமுதாயங்கள், எந்த சாமியும் வேண்டியும், அரியர் பாஸ் செய்யவில்லை, ஆனால், நம்ம சாமி தான், அரியர் பாஸ் செய்ய வைத்தது, இந்த சாமி நீடுடி பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்துகிறது. எந்த மாணவ சமுதாயம் தீர்க்கமான தீர்ப்பு எடுக்கிறதோ, அது தான் இறுதி தீர்ப்பாகும், மிகப்பெரிய இயக்கம், காங்கிரஸ், அன்று, அந்த இயக்கத்திற்கு, சாவு மணி அடித்தது, மாணவர் இயக்கம், இப்போது, மாணவ சமுதாயம் ஒன்று திரண்டு விட்டார்கள், அவர்கள், அம்மாவின் அதிமுக அரசு தான், ஆயுள் முழுக்க இருக்க வேண்டுமெனக்க் கூறுகிறார்கள்

கோவிட் 19 தொற்றிலிருந்து மக்களைக்க் காப்பாற்றிய அரசு, அதே சமயத்தில், மாணவ சமுதாயத்தையும் காப்பாற்றி உள்ளது, நம் கடமை, தலைமையைப் போற்ற வேண்டும், தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும், சாமானியர்களின் ஒரே இயக்கம், அதிமுக தான், இங்கு தான் எல்லோருக்கும், அங்கீகாரம் இருக்கு, வாய்ப்புகள் இருக்கு, அதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,

பிழைக்க மாட்டோம் என்கிறவர்கள் கூட ஒலிம்பிக்கில், பதக்கம் வென்று, எதிரிகளுக்கு, சிம்ம சொப்பனமாக உள்ளோம், முதல்வர் எழுந்து நின்று பதிலளித்தால், எதிரிகளுக்கு, அதை மறுப்பதற்கோ, விளக்கம் அளிக்கவோ எந்தவித ஆதாரம் இல்லை, உண்மை, சத்தியம் தர்மத்தை முன் வைத்து நம் உழைக்க வேண்டும். முதல்வர், துணை முதல்வரை , நீங்கள் நினைத்த நேரத்தில் பார்க்கலாம், பெரியார் நிகழ்ச்சியில், முதல்வருக்கே, வெப்பம் வைத்துப் பார்த்த, அற்புதம் எங்கும் இருக்காது, மக்களோடு, மக்களாக உள்ள சொத்தை, அம்மா விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் கழக அம்மா பேரவை இணை செயலாளர்கள் டாக்டர் ஜெ.ஜெயவர்தனன், என்.சதன்பிரபாகர், கே.ஏ.கே.முகில், கே.எஸ்.சீனிவாசன், கழக அம்மா பேரவை துணை செயலாளர்கள், டி.ரமேஷ், சி.டி.மூவேந்தன், அரும்பாக்கம் இ.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பகுதி கழக செயலாளர்கள் எம்.ஜி.ஆர்.எஸ்.வாசன், எம்.கே.சிவா, டி.தசரதன், செல்வகுமார், மு.உதயா, பேரவை பகுதி கழக செயலாளர்கள், கார்த்திக், நிர்தோஷ் லால்.சதாசிவம், ஹேமநாத், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்டிக்கர் ஜி.ரவிக்குமார் செய்திருந்தார்.