திருவள்ளூர்

வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே ஆட்சி கழக ஆட்சி – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பெருமிதம்

திருவள்ளூர்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே ஆட்சி கழக ஆட்சிதான் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பெருமிதத்துடன் கூறினார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாயலூர் ஊராட்சி கழக சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் வாயலூர் ஊராட்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் மோகன வடிவேல் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் புதிய உறுப்பினர் படிவங்களை நிர்வாகிகளிடம் வழங்கினார்.

பின்னர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக மக்கள் போற்றும் நல்லாட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த நான்காண்டு காலத்தில் அம்மாவின் வழியில் எண்ணற்ற பல திட்டங்களை இளைய சமுதாயத்திற்கு முதலமைச்சர் வாரி வழங்கி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கும். மற்ற மாவட்டங்களை காட்டிலும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

உழைப்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கின்ற ஒரே கழகம் நம்முடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான். இளைஞர்களை மற்ற கட்சியினர் வரவேற்பதில்லை. இளைஞர்களை அதிகமாக சேர்ப்பதும் அவர்களை அரவணைத்து அதிக வாய்ப்புகள் கொடுப்பதும் நம்முடைய கழகம் தான்.

ஆகவே இளைஞர் மற்றும் இளம்பெண்கள் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழகத்தில் இனிவரும் காலங்களில் அதிமுக என்று ஒரே இயக்கம் தான் இருக்கும்.

தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்த பல திட்டங்களை பார்த்து மற்ற மாநிலங்கள் அதை செயல்படுத்தின. ஆனால் ஒரு சில மாநிலங்கள் அதை தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் பாதியிலே நிறுத்தியுள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் தொடர்ந்து எண்ணற்ற பல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் மக்களிடையே கொண்டுபோய் சேர்த்துள்ளன.

வேறு எந்தக் கட்சியும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நிறைவேற்ற போவதுமில்லை திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களுக்காக எந்த நன்மையையும் திட்டமும் செய்யப்போவதில்லை என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் இயக்கமாக விளங்கிக் கொண்டு இருப்பதால் தான் தொடர்ந்து அடுத்த முறையும் ஆட்சிக் கட்டிலில் அமர்வோம் என்றும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் மற்றும் பாசறை நிர்வாகிகள் அனைவரும் கழக நிர்வாகிகளுடன் ஒற்றுமையாக இருந்து கழகப் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேசினார்.