தற்போதைய செய்திகள்

ரூ 27 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடம்பூரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காமராஜர் சிலையில் இருந்து தங்கம்மாள்புரம் வரை ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்டச் செயலாளருமான கடம்பூர் செ,ராஜூ துவக்கி வைத்தார்.

கயத்தார் ஒன்றியத்துக்குட்பட்ட கடம்பூர் பேரூராட்சி காமராஜர் சிலையில் இருந்து தங்கம்மாள்புரம் வரை பழுதடைந்து மக்கள் நடந்து செல்ல முடியாத அளவில் சாலை இருந்ததை அறிந்த கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பழுதடைந்த சாலையை பார்வையிட்டு மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப உடனடியாக ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க உத்தரவிட்டதுடன் மேற்படி பணியையும் துவக்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் கயத்தார் ஒன்றிய கடம்பூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எஸ்.வி.எஸ்.பி நாகராஜா, கயத்தார் ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், கடம்பூர் பேரூராட்சி செயல்அலுவலர் மாதவன், தூத்துக்குடி மாநகர எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பி.ஜெகதீஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.