தமிழகம்

சிறந்த தொழில்முனைவோருக்கு விருதுகள் – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை

இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் இந்த ஆண்டிற்கான சிறந்த தொழில்முனைவோருக்கான விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வரும் ‘CONNECT 2020’ மாநாட்டில், இந்த ஆண்டிற்கான சிறந்த தொழில்முனைவோருக்கான விருதினை சென்னை – கான்ஸ்யூமெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எல்.என்.சாய் பிரசாந்த்க்கும், தனியார் துறையில் சிறந்த வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்கான விருதினை லார்சன் அண்டு ட்யூப்ரோ லிமிடெட் – ஸ்மார்ட் வேர்ல்ட் அண்டு கம்யூனிகேசன் பிசினஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் ஆர். சீனிவாசனுக்கும்,

பொதுத் துறையில் சிறந்த வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்கான விருதினை பதிவுத்துறைத் தலைவர் ஜோதி நிர்மலாவுக்கும், உலகளாவிய செல்வாக்கு பெற்ற நபருக்கான விருதினை ப்ரஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் கிரீஷ் மாத்ருபூதத்திற்கும், சமூகத் தொழில்முனைவோருக்கான விருதினை கோவை – பர்பிள் அயர்னிங் நிறுவனத்தின் இயக்குநர் அமானுல்லாவுக்கும்,

ஊக்குவித்திடும் வகையிலான முன்மாதிரி நபருக்கான விருதினை இந்த்ரி ஆக்சஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் இராமநாதனுக்கும், கோவிட் சாதனையாளருக்கான விருதினை ஹெலிக்சான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜய் சங்கர் ராஜாவுக்கும், சகிப்புத் தன்மைக்கான விருதினை கோவை – சி.ஜி.வேக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ்க்கும், வழிகாட்டியாளர் விருதினை ப்யூச்சர் போக்கஸ் இன்போடெக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எம்.வி. சுப்பிரமணியனுக்கும், வழங்கி கவுரவித்தார்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.