தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம் ஒன்றியக் கழகம் சார்பில் 2 ஆயிரம் பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் – வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்

காஞ்சிபுரம்:-

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியக் கழகம் சார்பில் வேடல், பெரியாநத்தம், காலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 2000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, காய்கறி, பருப்பு உட்பட அத்தியாவசியப் பொருட்களை மாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்.

பெரியாநத்தம் பகுதியில் ஒன்றியக் கழகச் செயலாளர் தும்பவனம் டி.ஜீவானந்தம் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காலூர் அசோகன் ஏற்பாட்டில் அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மேற்கு மாவட்ட கழக செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி பேசியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். இது உறுதி.

மக்களுக்கு தேவையான அரிசி, காய்கறி, பருப்பு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நிவாரண உதவிகளை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு கழக அரசுக்கு என்றென்றும் துணை நிற்போம் என்று மனதார வாழ்த்துகின்றனர்”

இவ்வாறு மாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் அத்திவாக்கம் செ.ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயா உலகநாதன், ஒன்றிய மாணவரணி செயலாளர் எம்.எம்.மதன், கிளை கழக செயலாளர்கள் உலகநாதன், நாகேந்திரன், முருகன், முனுசாமி பிள்ளை, வெற்றிபான்டியன், அவளூர் சிதம்பரம், கீழ்பேரம்மநல்லூர் வெங்கடேசன் கழக நிர்வாகிகள் பாண்டியன்,பொன்னுரங்கம், வினாயகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.