தற்போதைய செய்திகள்

மாணவர் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் முதலமைச்சர் – அமைச்சர் பா.பென்ஜமின் பெருமித பேச்சு

அம்பத்தூர்

கழகத்தில் சேரும் புதிய உறுப்பினர்களை சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்கிறோம்.மாணவர் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திகழ்கிறார் என்று திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகச் செயலாளரும், அமைச்சருமான பா.பென்ஜமின் பெருமிதத்துடன் பேசினார்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துவக்க விழா நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு கோபுரம் திறப்பு விழா மற்றும் கழக கொடியேற்று விழா என முப்பெரும் நிகழ்ச்சிகள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் சோழவரம் அடுத்த காரனோடையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளர் பி.கார்மேகம் முன்னிலை வகித்தார். சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் எம்.நாகவேல் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான பா.பென்ஜமின் கலந்துகொண்டு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கழக கொடியை ஏற்றி வைத்ததோடு எம்ஜிஆர் சிலை கோபுரத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசுகையில், இங்கே தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்கள் தாங்கிப்பிடிக்கும் இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திகழ்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மாணவ சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக முதலமைச்சர் திகழ்கிறார். இன்று கழகத்தில் உறுப்பினராக சேரும் உங்களை நாங்கள் சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்கிறோம் என்றார். அதைத்தொடர்ந்து கழகத்தில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் படிவங்களை வழங்கி அமைச்சர் பா.பென்ஜமின் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சோழவரம் முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவரும், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான தேவநேரி மாரி, மாவட்ட பேரவை இணைச் செயலாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் ஒரக்காடு பாஸ்கரன், பேரவை துணைச்செயலாளர் காரனோடை வேல்முருகன் , சர்குணம், ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய தலைவர் பி.கே.பாலன், பி.கே.செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் சோழவரம் குணசேகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் தலைவரும் ஒன்றியக்குழு துணைத்தலைவருமான எம்.மாரி, சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் எம்.நாகவேல் ஆகியோர் செய்திருந்தனர்