தற்போதைய செய்திகள்

மாணவர்களின் மேற்படிப்பு கனவை நனவாக்கியது கழக அரசு – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு

செங்கல்பட்டு

மாணவர்களின் மேற்படிப்பு கனவை நனவாக்கியது கழக அரசு என்று மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் கூறினார்

செங்கல்பட்டு, மேற்கு மாவட்டம், தாம்பரம் நகரத்திற்கு உட்பட்ட 27-வது வட்ட கழகத்தின் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர் சேர்த்தல் முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் 27 -வது வார்டில் உள்ள நாகவள்ளி அம்மன் கோயில் அருகில் பழைய ஜி.எஸ்.டி ரோடு கிழக்கு தாம்பரம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தனம்மாணிக்கம், முன்னாள் நகர கழக பொருளாளர் கே.மாணிக்கம், 27வது வட்ட கழக செயலாளர் எம்.வசந்த் ஆகியோர்களின் ஏற்பாட்டில் கிழக்கு தாம்பரத்தில் நடைபெற்ற

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசியதாவது

“இளைய சமுதாயத்தினர் எப்போதுமே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதையே விரும்புவார்கள். புரட்சித்தலைவர் இயக்கத்தை ஆரம்பித்தவுடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் அவர் பின்னே அணிவகுத்தார்கள். அவர்களில் இளைய சமுதாயத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள். அதேபோல் இதயதெய்வம் அம்மா அவர்கள் தாலிக்கு தங்கம், மடிகணினி, விலையில்லா மிதிவண்டி என எண்ணற்ற புரட்சிகரமான திட்டங்களை இளைய சமுதாயத்திற்கு வழங்கினார்

அத்தகைய திட்டங்களை கழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதோடு, மேலும் மெருகேற்றி வருகிறது. மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வுகளை ரத்து செய்து லட்சக்கணக்கான மாணவர்களின் மேற்படிப்பு கனவினை நனவாக்கியதால் இளைய சமுதாயத்தினர் கழக அரசு மீது தீவிர பற்றுக்கொண்டுள்ளனர். இதனை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வருகின்ற 2021ம் ஆண்டு தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஹாட்ரிக் சாதனை படைக்கும். இந்த சாதனையில் இளைய சமுதாயத்தினரின் பங்கு சிறப்பானதாக அமையு

இவ்வாறு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசினார்

இந்நிகழ்வில் தாம்பரம் நகர கழக செயலாளர் எம்.கூத்தன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எல்லார் செழியன், தாம்பரம் நகர அம்மா பேரவை செயலாளர் ஏ.கோபிநாதன், மாவட்ட பிரதிநிதி பி.கே.பரசுராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் நி.மோகித்ராஜ், வட்ட கழக செயலாளர்கள் ஆர்.சி.சேகர், எம்.கஜேந்திரமுத்து, வட்ட கழக பொறுப்பாளர். ஏ.வெங்கடேசன் மற்றும் பிற வட்ட கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்..ம்.. :-து..