மதுரை

மதுரை வடக்கு முதன்மை தொகுதியாக மாற்றம் – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பெருமிதம்

மதுரை

மதுரை வடக்கு முதன்மை தொகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பெருமிதத்துடன் கூறினார்.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் அண்ணா பேருந்து நிலையம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற் குடையும், ஆத்திகுளம் அருகே ரூ.12 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ரூ.33 லட்சம் மதிப்பில் திட்ட பணிகளை மதுரைை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா திறந்து வைத்தார்.

பின்னர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்ததாவது:-

மதுரை வடக்கு தொகுதியில் மக்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு திட்டப் பணிகள் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ்செயல்பட்டு வருகிறது. தற்போது வடக்கு தொகுதியில் இதுவரை பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் வகையில் இதுவரை தலா ரூ.12 லட்சம் மதிப்பில் 26 சுத்தரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.மதுரை வடக்கு தொகுதியில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று பேவர்பிளாக் சாலைகள், தார் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகள் நிறைவேற்றப்பட்டு மதுரை வடக்கு தொகுதி முதன்மை தொகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் விசாகன், நகர பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற் பொறியாளர் மனோகரன், பகுதி கழகச் செயலாளர் ஜெயவேலு, மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழக துணைச் செயலாளர் முத்துக்குமார், மற்றும் வட்ட கழக செயலாளர்கள் மணிமுருகன், ஜெயராஜ், தங்கப்பாண்டி ,ஓச்சா தேவர், ஆறுமுகம், வெங்கடாசலம், காஜா, ஜெயராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் பழனியப்பன், மாவட்ட மீனவர் பிரிவு இணைச்செயலாளர் பிச்சை மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.