தமிழகம்

கடற்படை போர் கப்பலில் முதன்முறையாக 2 பெண் அதிகாரிகள் நியமனம் – துணைமுதலமைச்சர் பாராட்டு

சென்னை

கடற்படை போர்க்கப்பலில் இருந்து முதல்முறையாக விமானத்தை இயக்கும் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கப்பற்படையில் உள்ள போர்க்கப்பல்களில் உள்ள விமானத்தில் பணியாற்றும் முதல் பெண்கள் என்ற பெருமையை இந்தியாவிற்கு வழங்கியுள்ள குமுதினி யாகி மற்றும் ரித்தி சிங் ஆகியோரின் இந்த அளப்பரிய சாதனைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.