தமிழகம்

போர்க்கப்பல்களில் இருந்து விமானத்தை இயக்கும் 2 பெண் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை

போர்க்கப்பல்களில் இருந்து முதல்முறையாக விமானத்தை இயக்கும் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

போர்கப்பல்களில் இயக்கப்படும் விமானத்தை முதல்முறையாக இயக்கக்கூடிய பெண்கள் என்ற பெருமையை
துணை லெப்டினெண்ட் குமுதினி யாகி மற்றும் ரித்தி சிங் ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எவ்வளவு உயரமான சவால்கள் என்றாலும், அதனை கையாளக்கூடிய தகுதி பெண்களுக்கு உண்டு என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்து உள்ளார்.