திருவள்ளூர்

கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது – திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா பேச்சு

திருவள்ளூர்

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டதால் கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா கூறினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மணவாள நகர், பி.எம்.மஹால் ஆகிய இரண்டு இடங்களில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா, கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.அரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடம்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சூரகாபுரம் சுதாகர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இனை செயலாளர் ஞானகுமார் செய்திருந்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் பிவி.ரமணா ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

ஒவ்வொரு பூத்திலும் கட்சியின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்களும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். புதிதாக சேர்ந்த இளைஞர்களிடம் புத்துணர்ச்சி ஏற்படுத்தி மிகச் சிறப்பாக அவர்கள் பணி செய்ய நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அதிமுக என்றுமே ஒரு எஃகுகோட்டை. அம்மா அவர்கள் அப்பொழுதே இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைகளை உருவாக்கி வலு சேர்த்து கொடுத்திருக்கிறார். அம்மா மறைந்த பின்பு அதிமுக கலைந்துவிடும் என்று திமுக எண்ணியது. ஆனால் கழகத்தை ஆலமரம் போல் உருவாக்கி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறார்கள்.

மக்கள் மனதில் நாம் நிறைந்து உள்ளதால் வெற்றி பெறுவது உறுதி. நமக்கு ஒரே எதிரி திமுக தான். அம்மா அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையினர் கழகத்தின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சுதாகர், நகர செயலாளர் கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண் சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட பாசறை செயலாளர் நரேஷ்குமார், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் எழிலரசன், நகர அம்மா பேரவை தலைவர் ஜோதி, நகர இளைஞரணி செயலாளர் வேல்முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இனை செயலாளர் ஞானகுமார், திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் நேசன், மணவாளநகர் ஆர்.முரளி,உமாபதி, ஆர்.சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.