தற்போதைய செய்திகள்

ராமேஸ்வரம் யாத்ரீகர்கள் தங்கும் விடுதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – முதலமைச்சர் பேச்சு

சென்னை

ராமேஸ்வரத்தில் ரூ.30.90 கோடியில் கட்டப்பட்டுவரும் யாத்ரீகர்கள் தங்கும் விடுதி விரைவில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிநேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:-

அம்மாவின் அரசால், இந்த மாவட்ட மக்களின் நலன் கருதி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரூபாய் 345 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம். இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆசியோடு, தமிழகம் முழுவதும் 11 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை அமைக்கும் பணிகள், மத்திய அரசின் அனுமதி பெற்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எந்த மாநிலத்திலும் ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பெற்ற வரலாறு கிடையாது. அந்த வரலாற்றையும் அம்மாவின் அரசு படைத்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிப் பகுதியில் நவீன மருத்துவமனை உருவாக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளித்து நன்மை பயக்கும் ஒரு அற்புதமான திட்டத்தை அம்மாவின் அரசு துவக்கியுள்ளது.

கீழக்கரை, குதக்கோட்டை கிராமத்தில் புதிய சட்டக் கல்லூரிக்கு கட்டடம் கட்டும் பணி ரூபாய் 76.61 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமல்லாமல் 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இந்த மாவட்டத்திற்கு கொடுத்துள்ளோம். மேலும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி, ஏழை, எளிய மக்கள் உயர்கல்வி பயில வழிவகை செய்த அரசு அம்மாவின் அரசு என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.ராமேஸ்வரத்தில் யாத்ரீகர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி சுமார் ரூபாய்

30.96 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இப்பணி விரைந்து முடிக்கப்பட்டு பக்தர்கள் தங்குவதற்குண்டான வசதி உருவாக்கித் தரப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.