தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் பித்தலாட்ட அரசியலை அம்பலப்படுத்தி கழகத்தின் இமாலய வெற்றிக்கு பாடுபடுவோம் – முதலமைச்சர் முன்னிலையில் மதுரை மண்டல தகவல் பிரிவு நிர்வாகிகள் சூளுரை

ராமநாதபுரம்

மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு முதல் கட்டமாக மடிகணினிகளை முதலமைச்சர் வழங்கினார்.

இதனையொட்டி கழக அரசின் சாதனைகளை மக்களுக்கு வலைதளம் மூலம் பரப்புரை செய்து வருகின்ற 2021 தேர்தலில் கழகத்திற்கு இமாலய வெற்றியை பெற்றுத் தருவோம் என்று முதலமைச்சரிடம் மதுரை மண்டல தகவல் பிரிவு நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்யவும், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும் வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரை மண்டல தகவல் தொழில்நுட்பத் பிரிவு சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி வாரியாக தகவல் தொழில்நுட்ப பிரிவு தங்கள் பணிகளை செவ்வனே செயல்படுத்த அதி திறன் படைத்த மடிகணினிகளை, கழகத்தின் சார்பில் வழங்கினார்.

இதற்கான ஏற்பாட்டினை மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், கழக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மணிகண்டன், சதன்பிரபாகரன் கழக மகளிரணி செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் அவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கூறியதாவது:-

இந்த மடிகணினிகளை பயன்படுத்தி எங்கள் பகுதியில் இருக்கும் இளைஞர்களை ஒன்று படுத்தி அவர்களுக்கு அம்மா அரசின் விண்ணை முட்டும் சரித்திர சாதனைகளையும், நலத்திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், திட்டங்களின் பயன்பாடுகளை மக்கள் பெற தேவையான செயல்முறைகளை எடுத்துக் கூறுவோம்.

அதுமட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்கள் பாராட்டும் அம்மா அரசை களங்கம் கற்பிக்கும் வகையில் தொடர்ந்து வலைதளங்களில் திமுக செய்துவரும் பொய் பிரச்சாரங்களை மக்களிடத்தில் தோலுரித்து காட்டுவோம்.மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் காவலனாக இருக்கும் அம்மா அரசுக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் வருகின்ற 2021சட்டமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றிபெற அயராது பாடுபட்டு வலைதளங்களின் மூலம் இடைவிடாது பிரச்சாரம் மேற்கொள்வோம் என்று முதலமைச்சர் முன்னிலையில் சூளுரை ஏற்றனர்.

அதனை தொடர்ந்து மதுரை மண்டல தகவல் தொழில்நுட்பத் பிரிவு சார்பில் Zoom மீட்டிங் மூலம் உரையாற்றிய முதலமைச்சர் தனது வழியில் கண்தானம் செய்ய முன்வந்த மதுரை மண்டல ஐடி விங்கைச் சேர்ந்த 33,000 பேருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

முதலமைச்சரின் வாழ்த்துகள் கிடைத்த மகிழ்ச்சியில் 1 லட்சம் பேரை கண்தானம் செய்ய வைப்போம் என்று உறுதியேற்றோம் என்று வி.விஆர்.ராஜ் சத்யன் தெரிவித்தார்.